கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news