மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதோடு டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிக அளவான வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கி காணப்படுகின்றமையினால் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
ஆகவே மக்கள் நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதோடு, நுளம்பு கடிக்கும் நேரங்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் சுய சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news