சுகாதார அமைச்சருக்கு PHI அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை..!!!




எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு தனது அமைச்சு பதவியை இழக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரச்சினை எல்லை மீறுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரத் துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகில் இந்த எதிர்ப்பு வாகன பேரணி ஆரம்பமானது.

நகர மண்டபத்தில் இருந்து மருதானை நோக்கி பயணித்த குழுவினர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல உள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here