நாட்டின் பொருளாதாரம் 1.5 சத வீதத்தால் வீழ்ச்சி

 


இலங்கையில் 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகித எதிர்மறையான வளர்ச்சி வீதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 மூன்றாம் காலாண்டில் 25,36,490 மில்லியன் ரூபாவிலிருந்து 2021 மூன்றாம் காலாண்டுக்கான நிலையான விலையில் 24,97,489 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 40,87,148 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 41,32,955 மில்லியன் ரூபாவாக 1.1 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post


Put your ad code here