லண்டனில் வீட்டில் பற்றிய தீயால் நான்கு குழந்தைகள் மரணம்


தெற்கு லண்டனில் உள்ள சுட்டனில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

லண்டன் தீயணைப்பு துறை பணிப்பாளர் அண்டி ரோ இது தொடர்பில் தெரிவிக்கையில், 

இந்த மரணங்கள் "எல்லோரையும் ஆழ்ந்த சோகத்துடன் உணர்ச்சியடையச் செய்துள்ளது" என்றார்.

"தீயணைப்பு படையினர் விரைவாக வந்து குழந்தைகளை வீட்டிற்குள் கண்டுபிடித்தனர். அவர்கள் வீட்டிற்கு வெளியே கொண்டு வரப்பட்டு உடனடி அவசர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நான் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

லண்டன் தீயணைப்புப் படையின் கூற்றுப்படி, தமது முதல் குழுவினர் முழு தரை தளம் முழுவதும் கடுமையான தீயை எதிர்கொண்டனர்.

"எனது எண்ணங்கள் குழந்தைகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், முழு உள்ளூர் சமூகம் மற்றும் இந்த தீயினால் பாதிக்கப்படும் அனைவருடனும் உள்ளன.

"இந்த சம்பவத்தில் தொடர்புடைய எங்கள் ஊழியர்களின் நலன் எங்களுக்கு மிகவும் முக்கியமானது, அவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் ஆலோசனை வழங்கப்படும்." என அண்டி ரோ மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here