16 மாவட்டங்களில் பரவியுள்ள கொடிய நோய் -

 


நாட்டில் 16 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளதாகவும், கடந்த சில வருடங்களாக இது வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

1994 ஆம் ஆண்டு முதல் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் அனுராதபுரம் உட்பட வடமத்திய மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவாகியுள்ள சிறுநீரக நோயாளர்களில் 95 வீதமானவர்கள் விவசாயத்துடன் தொடர்புடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீரக நோயினால் முதியோர்களில் 70% மரணங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த போதிலும், 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இறப்பதற்கான போக்கு காணப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது. 

Previous Post Next Post


Put your ad code here