2022 க்கான வரவு - செலவுத் திட்டம் நிறைவேறியது..!!!


2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 157 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட உரை) நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 13 சனிக்கிழமை முதல் நவம்பர் (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

பின்னர் நவம்பர் 23 முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமானதுடன் சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி (இன்று) வரை 16 நாட்கள் இந்த விவாதம் நடைபெற்றது.

இந் நிலையிலேயே இன்று மாலை மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here