யாழில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

“6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர் நேற்று மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சேர்க்கப்பட்டார்.

எனினும் குடும்பப்பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தி இன்று மாலை பரிசோதனை அறிக்கையிடப்பட்டுள்ளது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த குடும்பப்பெண் கோவிட்-19 தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் தகன செய்யப்படவுள்ளது
Previous Post Next Post


Put your ad code here