சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதவான் திலின கமகே நிரபராதியாகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதிவாதி திலின கமகேவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முறைப்பாட்டுத் தரப்பு தவறிவிட்டதாக மேல்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
அதனடிப்படையில், அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Tags:
sri lanka news