அடக்குமுறைகள் அதிகரித்த நாடுகளுள் இலங்கையும் உள்ளடக்கம்

 


உலகளாவிய ரீதியில் ஊடகங்கள் மற்றும் ஊடகர்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படும் நாடுகளில் இலங்கையையும் உள்ளடக்கி பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் ஆர் எஸ் எப் எனப்படும் எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி ஊடக கண்காணிப்பு அமைப்பான எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையில், உலகளாவிய ரீதியில் சுதந்திர ஊடகங்கள் கடுமையாக நசுக்கப்படும் நாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது

180 நாடுகள் பட்டியல் இடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கைக்கு 127 ஆவது இடம்வழங்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை திறமையாக பேணும் நாடுகள் என்ற அடிப்படையில் ஸ்கன்டினேவிய நாடுகளான நோர்வே, பின்லாந்து, சுவிடன், டென்மார்க் ஆகியன முதல் 4 இடங்களை பிடித்துள்ளன.

சர்வாதிகார ஆட்சிகள் கொரோனா தொற்றுநோயைப் பயன்படுத்தி, ஊடகங்களை சர்வாதிகாரத்தின் கீழ்கொண்டுவந்து அரசாங்கத்தை விமர்சிக்கத்துணியும் ஊடகர்களை அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் எனவும் தேசவிரோதிகள் அல்லது பயங்கரவாதத்துக்குக்கு ஆதரவானவர்கள் என முத்திரை குத்திவருவதாகவும் எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கை உட்பட்ட நாடுகளில் காவல்துறையின் உடந்தையுடன், சுதந்திர ஊடகர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடர்ப்படுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டுள்ள எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு, உலகின் 13 பிராந்தியங்களின் தமது பணியகங்களை கொண்டுள்ளதுடன் 130 நாடுகளில் தனது பிரசன்னத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post Next Post


Put your ad code here