கொழும்பில் இன்றையதினம் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட இடத்தில், மோட்டார் சைக்கிளை நிறுத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தவேளை குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளை பிடிக்க முயற்சித்துள்ளார். எனினும் பொலிஸ் உத்தியோகத்தரை இழுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிள் பயணித்தமை அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவானது.
எனினும் பொலிஸ் உத்தியோகத்தரை இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்ற நிலையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் அகப்பட்டு கீழே விழுந்துள்ளது.இதில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.