அமெரிக்காவை தாக்கிய ஒமிக்ரான்..!!!


கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் நோயாளி ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஒமிக்ரோன் பரவல் சூழல் குறித்து புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் உலகில் 23 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் உலகின் கவனத்தை திருப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
Previous Post Next Post


Put your ad code here