சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று (01) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை விற்பனை செய்வதற்கு எந்தவித ஏற்பாடும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்ததுடன், இதனை கொள்வனவு செய்வதற்கு எவரும் முன்வரவில்லை என்றும் கூறினார்.
Tags:
sri lanka news