வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு..!!!


யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனங்களப்பு பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றினை பராமரித்து வரும் அவர், தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானித்து இருந்த நிலையில் இன்றைய தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , வீட்டுக்குள் பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here