Wednesday 1 December 2021

இலங்கையில் படிப்படியாக அதிகரித்து வரும் HIV நோயாளர்கள்..!!!

SHARE



ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கடந்த சில வருடங்களாக எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (01) உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுங்கள், எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்´ என்பதுதான் இந்த ஆண்டு எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும்

2020 ஆம் ஆண்டில், நாட்டில் 363 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டதாகவும் 2019 இல் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 439 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
SHARE