நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதிபெற்ற எரிவாயு கொள்கலன்களை மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் விடுத்த உத்தரவையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியு்ளளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை தரநிர்ணய நிறுவகத்தினால் அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் காஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்தே எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதிபெற்ற எரிவாயு கொள்கலன்களை மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் நேற்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news