சங்கானை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சித்தங்கேணி மதுவரி நிலைய உத்தியோகத்தர்களால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நபர் முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை கடத்திச் சென்றபோதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது அவர் பயணித்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news