மேல் மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை

 


கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 147 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டிகைக் காலங்களில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் வீதித் தடைகள் மற்றும் நடமாடும் ரோந்துப் பணிகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது ​​11,162 வாகனங்களும், 15,685 நபர்களும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here