வெலிகம, வெவெகெதரவத்த பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (30) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டு வீட்டின் மேற்கூரை எரிந்து நாசமானது.
வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது பாட்டியும், 13 வயது சகோதரியும் அருகில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் வெலிகம பொலிஸார் தீயை அணைக்க மாத்தறை தீயணைப்பு வாகனங்களை வரவழைத்துள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு அல்லது மற்ற உபகரணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news