அகில இலங்கை மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை போக்குவரத்து தனியார் சேவைகள் சங்கம் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தில் 20% அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருகிறது. எரிபொருள் விலை உயர்வு, வாகன பராமரிப்பு விலை உயர்வு, உதிரிப்பாகங்களின் விலை உயர்வு போன்ற பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம். சுசில் பிரேமரத்ன தெரிவித்தார்.
தூரத்தைப் பொறுத்து அதிகபட்ச கட்டண உயர்வு ஐநூறு ரூபாவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Tags:
sri lanka news