சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் தற்போது 100 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சீரற்ற காலநிலையால் 121 குடும்பங்களை சேர்ந்த 380 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொடிகாமம் வடக்கு ஜே 326 கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட, சந்தை வீதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா உள்ளிட்டவர்கள் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் வீதியில் தேங்கியுள்ள வெள்ளநீரினை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.