சிறுநீரக நோயாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்படாமையால் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை ஊழியர்களுடன் நோயாளிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சம்பவத்தை அறிந்து காவல்துறையினரும் குறித்த இடத்திற்கு சென்றனர்.
பல மாதங்களாக தங்களுக்கு மருந்து கிடைக்கவில்லை என சிறுநீரக நோயாளிகள் முறைப்பாடு தெரிவித்ததுடன், மருந்து எழுதி தருமாறு ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
Tags:
sri lanka news