ஒன்று வெடித்தால் தொடர் குடியிருப்புக்களே அழியும்

 


மலையகத்தில் மக்கள் தொடர் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வரும் நிலையில் எரிவாயு சிலிண்டர் அல்லது எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்தால் அனைத்து குடியிருப்புக்களும் அழிந்து விடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் மக்களை அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். மேலும், மலையகத்தில் அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது மிக கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த மூன்று தினங்களுக்குள் ஹற்றன், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here