இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 150 ரூபாயினாலும் 400 கிராம் பக்கெட்டின் 60 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 400 கிராம் பக்கெட்டின் புதிய விலை 540
ரூபாயாகவும், 1 கிலோ கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை ஆயிரத்து 345 ரூபாயாகவும் உயரும்.
கடந்த ஒக்டோபரிலும் பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை அதிகரித்தனர்.
உலக சந்தையில் விலை உயர்வினால் பால்மாவை தற்போதைய விலையில் வழங்க முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்