2022 புத்தாண்டு பலன்கள் – துலாம்..!!!


இதுவரை வாழ்க்கையில் சனி பகவானால் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த துலாம் ராசிக்காரர்களுக்கு வருகின்ற 2022ஆம் ஆண்டு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. குரு சஞ்சாரம் காரணமாக 2022 ஆம் ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய பொன்னான வருடமாக இருக்கும். எதையும் ஆழமாக யோசிக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு மன வலிமையை கொடுக்கக் கூடிய அற்புத ஆண்டாக இவ்வாண்டு அமைகிறது. மேலும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க இருக்கிறது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு படிப்படியாக ஒவ்வொரு பிரச்சனைகளும் தீர்ந்து கொண்டே வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நிறைய நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் திருமண விஷயத்தில் பெற்றோர்களுடைய கனவு நனவாகும் அற்புத ஆண்டாக இருக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் தேடி பயணிக்கும் ஆண்டாக அமைய இருக்கிறது.

பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புத ஆண்டாக அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான ஏற்றம் அதிகரித்தாலும் அதற்குரிய விரயங்களும் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. எனவே ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, திட்டமிட்டு செயல்படுவது போன்றவற்றை கடைபிடித்தால் முன்னேற்றம் காணலாம். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் அவ்வபோது உண்டாகும். கிடைக்க வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.

தொழில்:
தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் அதிக லாபம் காணும் யோகமுண்டு. எனவே அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடிய நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது. மேலதிகாரிகளின் ஆதரவை பெற்றுக் கொள்வீர்கள். இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் பெறலாம். தொழில் சார்ந்த அனுபவம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. வெற்றியை நோக்கி பயணிக்கும் இந்த ஆண்டை விடாப்பிடியாக பற்றிக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு இவ்வாண்டு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். வாகன ரீதியான பயணங்களின் போது கவனம் தேவை. முறையற்ற உணவு பழக்கங்கள், மது, புகை போன்ற தீய பழக்கங்கள் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் அவற்றை முற்றிலுமாக தவிர்க்க முயற்சிப்பது நல்லது. சரியான நேரத்திற்கு உணவு அருந்துவது ஆரோக்கியம் காக்க வழிவகுக்கும்.

காதல்:
கணவன் மனைவி இடையே இருக்கும் புரிதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுக்கிர பகவான் அருள் இருப்பதால் ஊடல்கள் ஏற்பட்டாலும் பின் உடனே அவை நிவர்த்தி ஆகி விடும். புதிதாக திருமண பந்தத்தில் இணைய இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடைபெறும் ஆண்டாக இவ்வாண்டு அமைய இருக்கிறது. மேலும் காதல் ஜோடிகள் பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்து கொள்வீர்கள்.

பரிகாரம்:
பவுர்ணமி நாட்களில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வர வாழ்வில் ஏற்றம் காணலாம். கடன் தொகைகள் குறைய கால பைரவர் வழிபாடு செய்யுங்கள். இல்லாதவர் மற்றும் இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்து வர எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் வந்த வழியே சென்று விடும்.
Previous Post Next Post


Put your ad code here