யானைகள் தடுப்பு நிலையத்தில் உயிரிழக்கும் காட்டு யானைகள்

 


ஹொரவ்பத்தனை யானைகள் தடுப்பு நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 12 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

தடுப்பு நிலையத்தில் உள்ள காட்டு யானைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மனித நடவடிக்கைகளின் காரணமாக உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு தீர்வுக் காணும் வகையில் 997 ஹெக்டேயர் பரப்பளவில் ஹொரவ்பத்தானை யானைகள் தடுப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் மற்றும் மனித உயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இங்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 52 காட்டு யானைகள் இந்த தடுப்பு நிலையத்தில் காணப்பட்டதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், குறித்த 52 யானைகளில் 12 யானைகள் உயிரிழந்து விட்டதாக குறிப்பிப்பட்டிருந்தது.

இதில் 5 யானைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும், யானைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கவில்லை என வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here