தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையிலேயே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது வீட்டு வளவினுள் உள்ள கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் வயது 23 என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news