தனிநடிப்புப் போட்டியில் யாழ். நடேஸ்வராக் கல்லூரி முதலிடம்..!!!


வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தனிநடிப்புப் போட்டியில் யா/ நடேஸ்வராக் கல்லூரி முதலிடம் வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயல் திறன் அரங்க இயக்கம், கலாநிதி விஜயரத்தினம் கென்னடி ஞாபகார்த்தமாக நடத்திய தனிநடிப்பு போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் காரைநனர் இந்துக்கல்லூரியில் 10.01.202 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

‘பேரிடரை வெல்வோம்’ என்ற தலைப்பில் வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற இந்த நாடகப்போட்டியில் யாஃ நடேஸ்வராக் கல்லூரியின் மாணவி செல்வி வானுப்பிரியா சிவசுப்பிரமணியம் முதலாவதிடத்தைப் பெற்று ரூபா 25000 பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார். இரண்டாவது இடத்தினை பருத்தித்துறை யா/வடஇந்து கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் றிச்சட் சீன் சாமுவேல் பெற்றுக்கொண்டு பதினையாயிரம் ரூபா பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.

மூன்றாம் இடத்தை யா/ திருக்குடும்ப கன்னியர்மடம் தேசியப்பாடசாலையைச் சேர்ந்த செல்வி டனோஜா எட்வின் பெற்றுக்கொண்டதோடு பத்தாயிரம் ரூபா பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.

மேலும் சிறந்த ஆற்றுகைகளாக முஃமுல்லைத்தீவு றோ.க.த.பெ பாடசாலை மாணவன் செல்வன் தக்சயன் உதயகுமார் மற்றும் பருத்தித்துறை செ.தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த செல்வி திவ்யா பாலசுப்பிரமணியம் ஆகியோரின்; தனிநடிப்பு ஆற்றுகை தேர்வாகியிருந்தன.

இந்தத் தனி நடிப்பு பரிசளிப்பு விழாவில் வலிகாமம் கல்வி வலையத்தின் பணிப்பாளர் திரு பொ.ரவிச்சந்திரன் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்திருந்தூர்.

மேலும் அவர் தனது கருத்துரையில் “கலை மனிதனோடு இரண்டரக்கலந்தது. கிராமங்களில் அது உயிர்நாடியாக இருந்தது. முன்னர் கலையூடாகத்தான் அறிவு பகிரப்பட்டது. நாடகம் மனித ஆற்றுப்படுத்தலின் முக்கியமானது. செயல் மூலம் வெளிப்படுத்துவதால் மனதில் பதிகிறது. இன்று நாடகத்துறைக்கான உற்சாகப்படுத்தல்களும் ஊக்கப்படுத்தலும் இல்லை. நாடக மேடையேற்றங்கள் நடைபெறுவதில்லை. பலர் ஒன்று கூடி செய்யமுடியாத நிலைகாணப்படுகின்றது இந்தச் சூழலில் தனியொருவராக நடிக்கின்ற நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இது மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்துகிறது. தனியொருவராக சிறப்பாகச் செய்கின்ற மாணவர்களைப்பார்க்கின்ற போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

செயல் திறன் அரங்க இயக்கத்தின் தலைவர் தேவநாயகம் தேவானந்த் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விரந்தினர்களாக வடக்கு மாகாகண அழகியற்கற்கைகள் உதவிக்கல்விப்பணிப்பாளர் சி.சிவசிவா காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு ம.மகேந்திரன் காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திரு அ.ஜெகதீஸ்வரன் மற்றும் விஜயரத்தினம் பிறேமதாஸ்குமாரசிறி யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்துறை முதுநிலை வரிவுரையாளர் காலநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.














Previous Post Next Post


Put your ad code here