Thursday 6 January 2022

கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயா்வு - இணைய சேவை துண்டிப்பு..!!!

SHARE


கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயா்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தானில் காா்களில் எரிபொருளாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விலை உயா்வுக்கு எதிராக அந்நாட்டு தலைநகா் நூா்-சுல்தான், ஆல்மட்டி, மெங்கஸ்டாவ் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கானோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆல்மட்டி நகரில் உள்ள மேயா் அலுவலகத்தை சூறையாடிய போராட்டக்காரா்கள், அந்த அலுவலகத்துக்குத் தீ வைத்தனா்.

மேலும் பொலிஸாரையும் அவா்கள் தாக்கினா். இதில் பலா் உயிரிழந்தனா்.

போராட்டக்காரா்களைக் கலைந்து போகச் செய்வதற்கு பொலிஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா். இந்தப் போராட்டங்கள் தொடா்பாக நூற்றுக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அந்நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகா் நூா்-சுல்தானில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது
SHARE