இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பலரும் கொரோனா மற்றும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் அருண் விஜய் தனக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இயக்குநர் அருண் வைத்தியநாதன் ஒமிக்ரோன் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்திருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் நடிகை மீனா தான் உட்பட தன் குடும்பத்தினர் அனைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:
cinema news