9 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று (18) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனை மிகவும் எளிமையான முறையில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலை 10.00 மணிக்கு அரியாசனத்தில் உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதியின் அரசாங்க கொள்கை அறிக்கையின் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news