தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று (18) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதால், இன்று நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல், விரிவுரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துதல், கேள்விகளை யூகித்தல் உள்ளிட்ட வினாத்தாள்களை அச்சடித்து விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது
Tags:
sri lanka news