கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பிரதேசத்தில் இன்று (13) காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
அதிவேகமாகச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடந்துச் சென்று கவிழ்ந்து மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் படுகாயமடைந்துள்ள் நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் சாரதியான தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news