பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது இரகசிய பகுதியை காட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் காரில் இருந்து அவ்வழியாகச் சென்ற பாடசாலை மாணவிகளிடம் தனது இரகசியப் பகுதியைக் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாணவிகள் தமது அதிபருக்கு அறிவித்ததையடுத்து அதிபர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவியை சோதனை செய்த பின்னர் காரை அடையாளம் கண்டு சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news