வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓபியம் (OPIUM) அபின் போதைப்பொருளுடன் கல்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 460 கிராம் ஓபியம் (OPIUM) அபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனை கடத்திச்செல்லப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த போதை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news