பொல்பிதிகம, மதஹபொலயாய, பொத்துவில பிரதேசத்தில் உள்ள வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொலையின் பின்னர் சந்தேக நபர் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news