சஜித் பிரேமதாச கோணேஸ்வரம் கோவிலுக்கு விஜயம்..!!!




எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) திருகோணமலை வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரம் கோவிலுக்கு விஜயம் செய்து சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அமைந்த ‘பிரபஞ்சம்’ நிகழ்ச்சித் திட்டம் திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்று வரும் அதேநேரமே கோணேஸ்வரம் கோவிலுக்குமான விஜயமும் அமைந்திருந்தது.

இவ் விஜயத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், திருமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் நாளை (05) வரை கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here