எஜமானியை வெட்டி கொலை செய்த இருவருக்கு விளக்கமறியல்..!!!




மட்டக்களப்பு பார் வீதியில் பெண் ஓருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வேலைக்காரியும் அவரது தந்தையையும் எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் இன்று திங்கட்கிழமை (04) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி பார்வீதியிலுள்ள எஜமானியம்மாவான 48 வயதுடைய செல்வராசா தயாவதியை வேலைக்காரி ஒருவர் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்த 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற வேலைக்காரியையும் அவரது தந்தையையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை இன்று ஜனவரி 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டர்.

குறித்த வழக்கு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்போது கொரோனா காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் அழைத்து வரமுடியாதையிட்டு காணொளி மூலம் தொடர்ந்து 14 நாட்களான 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், 11 ஆம் திகதி மரண விசாரணையை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here