முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு - ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு..!!!




முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று கைது செய்யப்பட்டார்.

பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்க கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து 24.12.21 அன்று முல்லைத்தீவு பொலிசாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 04.01.2022 ஆம் திகதி இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்த முல்லைத்தீவு நீதிபதி குறித்த நபரை எதிர்வரும் 18-01-2022 வரை விளக்கமையலில் வைக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணைகளை 18-01-2022 அன்றுக்கு தவணையிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here