சம்பளம் அதிகரிப்புடன் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்..!!!




51,000 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிரந்தர நியமனத்துடன் அவர்களது சம்பளம் 31,490 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறுகிய காலத்திற்குள் அதிகளவானோருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் முதற் சந்தர்ப்பம் இதுவாகும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த பட்டதாரிகள் இதுவரை மாகாண சபைகள், மாவட்ட செயலகம், பிரதேச செயலாளர் காரியாலயம், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அபிவிருத்தி அதிகாரிகளாக பயிற்சி பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here