வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

 


இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (25) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.


இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயனாத் கொலம்பகே, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Previous Post Next Post


Put your ad code here