கொழும்பு துறைமுக நகரில் இன்று திறக்கப்படும் இரு பகுதிகள்!

 


கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொது நடைபாதை மற்றும் இலகுரக படகு முற்றம் ஆகியவற்றை இன்று (09) திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தற்போது இந்நாட்டிற்கு வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இதேவேளை, சீன - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அதன்படி, நாளை (10) முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள நுழைவின் ஊடாக பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் குறித்த பகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here