சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் அண்ணன் காலமானார்


டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனும் பிரபல தயாரிப்பாளருமான ரமேஷ் பாபு உடல் நலக் குறைவாக காலமானார்.

இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர்.

 நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் நியூ இயர் கொண்டாட்டத்துக்காக துபாய் சென்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா பரவியதாக சில தினங்களுக்கு முன்னதாக ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் மகேஷ் பாபு இறுதி சடங்கில் எப்படி கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, அல்லூரி சீதராமராஜு படத்தில் குழந்தை அல்லூரி சீதராமராஜுவாக 1974ம் ஆண்டு ரமேஷ் பாபு சினிமாவில் அறிமுகமானார். 1987ம் ஆண்டு வெளியான சாம்ராட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பஜார் ரவுடி, பிளாக் டைகர், பச்ச தோரணம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், 1997ம் ஆண்டு வெளியான என்கவுன்ட்டர் படத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகினார்.

பின்னர் 2004ம் ஆண்டு கிருஷ்ணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்நிலையில், திடீரென மாரடைப்பு காரணமாக ரமேஷ் பாபு உயிரிழந்தது திரையுலகத்திற்கு பெரிய இழப்பாக மாறியுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here