4-வது பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் – அமெரிக்க மருத்துவ நிபுணர்கள்..!!!


கொரோனா உருமாறிய வைரசான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அமெரிக்காவில் 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி (Antony Fauci) கூறியுள்ளார்.

பூஸ்டர் தவணை தடுப்பூசி என்பது வயது மற்றும் பாதிப்பு அடிப்படைகளில் இருக்கலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கொரோனாவை முழுமையாக அகற்ற 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் 21 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனைகள் பைசர் மருத்துவ நிறுவனத்தால் நடத்தப்பட்டுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here