வாகனங்களின் விலை குறைவடையாது..!!!


அரசாங்கம் வாகன இறக்குமதி நடவடிக்கையினை ஆரம்பித்தாலும் , வாகனங்களின் விலை குறைவடையாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வாகன விநியோகஸ்தர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சம்பத் மெரஜ்சிகே தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியன காரணமாக வாகனங்களின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாகவும் இந்த நிலைமையினை சரிசெய்வதற்கு நீண்டகாலம் தேவைப்படுமெனவும் சம்பத் மெரஜ்சிகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி நடவடிக்கைக்கு டொலர் இல்லாத நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரஜ்சிகேட் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here