கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்..!!!


கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் என்று மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் பரிசோதனை செய்தவர்களில் 200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 50 பேர் மாணவர்களும், 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும்
உள்ளடங்குகின்றனர். அத்தோடு இரண்டு கர்ப்பிணித் தாய்மாரும்
தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் மருத்துவர் நிமால் அருமைநாதன்
தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தொற்று பரவும் வேகம் அதிகமாகக்
காணப்படுகின்றமையால் பொது மக்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து செயற்பட வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தாதுள்ளவர்கள் அவற்றைத் தவறாது செலுத்திக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here