காலி, பூஸ்ஸ, ரிலம்ப சந்தியில் புகையிரத கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (01) காலை 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதியுள்ளது.
அதே பிரதேசத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news