கோண்டாவில் வீடு உடைப்பு - மூவர் கைது..!!!


யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் மூவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொனறில் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Previous Post Next Post


Put your ad code here