கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பின்னர் லொறி, மின்சார உபகரண விற்பனை நிலையத்தின் மீது மோதி நின்றதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலையில் இருந்து மத்தேகொட நோக்கி லொறி பயணித்த போது பிரேக் செயலிழந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news