இலங்கையில் அனைத்து வகை பெற்றோல் மற்றும் டீசல்களின் விலையை லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (எல்ஐஓசி) அதிகரித்துள்ளது.
அதன்படி, பெற்றோல் லீற்றருக்கு 50 ரூபாயும், டீசல் ஒரு லீற்றர் 75 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 254 ரூபாயும் டீசல் ஒரு லீற்றரின் விலை 214 ரூபாயும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது